சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்

View Comments
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்,வெண்கொற்றனார்
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.

- வெண்கொற்றனார்