யாரினும் இனியன் பேரன் பினனே

View Comments
குறுந்தொகை : மருதம் - தோழி கூற்று

யாரினும் இனியன் பேரன் பினனே
யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே.

- வடம வண்ணக்கன் தாமோதரனார்