கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி

View Comments
குறுந்தொகை : மருதம் - பரத்தை கூற்று

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி,ஔவையார்
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாமஃ தயர்கம் சேறும் தானஃது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.

- ஔவையார்.