அபிராமி அந்தாதி(10-11)

View Comments

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே, அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

 ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

-அபிராமி பட்டர்