குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று

View Comments

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.

- பேரெயின் முறுவலார்