இலங்குவளை நெகிழச் சாஅ யானே
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 மே 2012 19:00
- எழுத்தாளர்: அம்மூவனார்
- படிப்புகள்: 3150
நெய்தல் - தலைவி கூற்று
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைதல் நாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.
-அம்மூவனார்