கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை

கனவுகள்

பயனாளர் மதிப்பீடு: 3 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
கனவுகள்

ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது
நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை
இன்னும் என்னால் தாண்டிக் குதிக்கமுடியவில்லை.

கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது
மயில்முடி குட்டிபோட இரை எடுத்து
கால் சட்டையின் இரகசிய அறையில் - என்று
மாற்றிப்போட்டு ஊரலாகிப்போனது

தேரிக்குளத்தின் தாழம்மூடுகளில்
வாத்து முட்டை பொறுக்கப்போய்
சாரையும் நல்ல பாம்பும் கனவில்
வந்து பிணைந்தாடி காய்ச்சல் வந்ததும்

தெவங்கி நிற்கும் செம்மண் மழைநீரில்
விழுந்தெழுந்து வெள்ளைச்சட்டை நிறம்மாறி
முழங்காலின்கீழே தெறச்சி வால் தடம் பதித்ததும்

ஆத்தா அடித்தழுதழுது ஏசி
கண்ணீர் கவிதை எழுதி
கிழித்து எரிக்கப்பட்டதும்

பின்னாளில் என்ன எளவல எழுதா ?
எவளுக்குல எழுதா
எனும் இரணங்களின் மீதே
என் கவிதை இரத்தம் குடித்துக் கிடந்ததும்

இப்படியாய் என் பழய நான்
கணிணியின் காலடியில் காலாவதியாகிக் கிடக்கும்
நவீன நானிடம் மறந்துவிட்டாயா?
எனக் கண்ணடித்துச் சிரிக்கும் கதை

- இரா.அரிகரசுதன்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி