கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிஞர் பக்கம்

வைரமுத்து

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டத்தில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த வைரமுத்து திரையுலகிலும் இலக்கிய உலகத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை வெகு சீக்கிரமாக அமைத்துக் கொண்டார்.

 

"கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா), ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை), கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...), சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)  ஆகிய பாடல்களுக்காக ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டில் கலைமாமணி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

 

இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.

படைப்புகள்

 

கவிதைத் தொகுப்பு

 • வைகறை மேகங்கள்
 • சிகரங்களை நோக்கி
 • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
 • தமிழுக்கு நிறமுண்டு
 • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
 • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
 • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
 • இதனால் சகலமானவர்களுக்கும்
 • இதுவரை நான்
 • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
 • பெய்யென பெய்யும் ம‌ழை
 • நேற்று போட்ட கோலம்
 • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
 • ஒரு மெளனத்தின் சப்தங்கள்

நாவல்

 • தண்ணீர் தேசம்
 • கள்ளிக்காட்டு இதிகாசம்
 • கருவாச்சி காவியம்
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி