கவிஞர் வாலி

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 
View Comments

வாலி ஒரு தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். வாலி நெடுங்காலமாக தமிழ்திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.வாலி அவர்கள் சினிமா துறையில் 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்கள் பலவும் இன்றும் மக்கள் கவலை போக்கும் மாமருந்தாக இருந்து வருகின்றன. இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஸ்ரீரங்கத்தில் 1931 ம் ஆண்டு பிறந்தார். வாலியின் மனைவி திலகம் உடல் நலக்குறைவு காரணமாக 14 செப்டம்பர் 2009 அன்று மரணமடைந்தார்.

இவரின் படைப்புகள் சில

அவதார புருஷன்
பாண்டவர் பூமி
ராமானுஜ காவியம்
கிருஷ்ண  விஜயம்
கலைஞர் காவியம்
கிருஷ்ண பக்தன்
நானும் இந்த நூற்றாண்டும்