கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ஹைக்கூ கவிதைகள்

ஏழை

தாவணி
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்

- ரசிகவ் ஞானியார்
Add a comment

வரதட்சனை

money
நாகரீகமாய் எடுக்கும் பிச்சை.
வரதட்சனை.  

- கி.சார்லஸ்
Add a comment

வரதட்சணை

வரதட்சணை

பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!

- ரசிகவ் ஞானியார்
Add a comment

விபத்து

கோயில்சிலைகள்

கோயிலை கண்டதும்
டூவீலரில்சென்றவன்  
கையெடுத்தான்.
பின்னால் வந்தவன்  
அவன் காலெடுத்தான்.
வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது,  
கோயில்சிலைகள்.

- நித்தியசார்லஸ்
Add a comment

காவல்காக்கும் முற்கள்

காவல்காக்கும் முற்கள்
காவல்காக்கும் முற்கள்
முன்னாலே தேன் குடிக்கின்றன   
வண்டுகள்!
- நித்தியசார்லஸ்
Add a comment

பசி

பசி
மெல்ல நெருங்கினாள்
விரலை வருடினாள்
வெட்கத்தில் சிணுங்கினாள்
தீர்ந்தது - ஒரு வேளை பசி!

-புகழேந்தி
Add a comment

பனித்துளிகள்

பனித்துளிகள்
வண்டுக்
காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்

- நவின்
Add a comment

குட்ஸ் வண்டி

goodstrain
வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….

குட்ஸ் வண்டி
- நவின்
Add a comment

குழந்தை தொழிலாளி

குழந்தை தொழிலாளி
கண்ணீர்த்துளியின் ஈரத்தில்
நமுத்து போனது தீக்குச்சி!

- புகழேந்தி
Add a comment

உன் நினைவுகள்...

ninaivugal
தோற்றாலென்ன
வெற்றிப் புன்னகையோடு உன்
நினைவுகள்....
- ஜெயந்த் கிருஷ்ணா
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி