கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ஹைக்கூ கவிதைகள்

பெண்ணின் காதல்

பெண்ணின்காதல்
காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்

இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்.

- நா.சார்லஸ்
Add a comment

தேர்தல் கூட்டணி!

தேர்தல் கூட்டணி!
அடிக்கும் கொள்ளையில்,
ஆளுக்கு எவ்வளவு?
தேர்தல் கூட்டணி!

கொள்ளையில் மக்களுக்கும்
பங்கு...ஓட்டுக்கு காசு!

- சரவணன்
Add a comment

நம் மகள்!

நம் மகள்!
நீதான் அழகி
என்று கர்வம்
கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க
பிறப்பாள் நம் மகள்!

- கவிப்பித்தன்
Add a comment

காலங்களின் கோலங்கள்

காலங்களின் கோலங்கள்
சரியான  மணவாளன்
கிடைக்காமல்  போனதால்  -
முதிர்  கன்னியானது ...
மலையடிவாரப்
படிக்கல் !

- முத்து கருப்புசாமி
Add a comment

கண்ணீர்த்துளிகள்

கண்ணீர்த்துளிகள்

பிரிவின்
சொந்தம்...
"கண்ணீர்த்துளிகள்"

- மணிகண்டன் மகாலிங்கம்
Add a comment

புத்தாண்டு

புத்தாண்டு
ஜனனமும் மரணமும்
கைகுலுக்கி
விடைபெறுகிறது...
புத்தாண்டு!

- முத்து கருப்புசாமி
Add a comment

கறுப்புச்சூரியன்

கறுப்புச்சூரியன்
கண்களுக்கு புலப்படும்

"கறுப்புச்சூரியன்"...

அவள் "கறுவிழிகள்"...

- மணிகண்டன் மகாலிங்கம்
Add a comment

மவுனம் தந்த பரிசு...

eyes crying
காதலியை பிரிந்த பிறகு

பிரிவின் நினைவாக

மவுனம் தந்த பரிசு...

கண்ணீர்த்துளிகள்!

-  மணிகண்டன் மகாலிங்கம்
Add a comment

ஜன்னல்

Window
நீ
ஜன்னலின் வழியே
எட்டிப் பார்த்த பொழுதுகள்
சதுரமாய் ஒரு வானத்தை
எனக்கு ஞாபகப்படுத்தும்!

- சலோப்ரியன்
Add a comment

நரை

நரை

தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !

- பனித்துளி சங்கர்
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி