கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

திரையில் மலர்ந்த கவிதைகள்

ஒரு பாதி கதவு

திரைப்படம்: தாண்டவம்

 

ஒரு பாதி கதவு

 

நீ என்பதே... நான் தான் அடி ...
நான் என்பதே... நாம் தான் அடி...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்

நீ என்பதே... நான் தான் அடி ...
நான் என்பதே... நாம் தான் அடி...

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

- நா முத்துகுமார்

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்

படம் : நண்பன்

 

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்


என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்

நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்

தோழனின் தோள்களும்
அன்னை மடி - அவன்
தூரத்தில் பூத்திட்ட
தொப்புள் கொடி

காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துப்படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான்மேகம் போல நின்றோம்

புது பாதை நீயே போட்டுத்தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயைத்தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்

- விவேகா

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

படம் : உலகம் சுற்றும் வாலிபன்  
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்

- கவிஞர் வாலி

வெட்டிவேரு வாசம்

படம்: முதல் மரியாதை
வெட்டிவேரு வாசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ….மானே

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு
யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு
பொத்தி வச்சவுக யாரு

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத
பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

- வைரமுத்து

தூது செல்வதாரடி

படம்: சிங்கார வேலன்
தூது செல்வதாரடி
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர

- பொன்னடியன்

கண்ணாலே காதல் கவிதை

படம்: ஆத்மா
கண்ணாலே காதல் கவிதை
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தாளே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம்மேனி உன் வசமோ

உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

- கவிஞர் வாலி

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி