கலப்பினம்
- விவரங்கள்
- பிரிவு: மொழிபெயர்ப்பு கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2009 19:00
- எழுத்தாளர்: லாங்ஸ்டன் ஹ்யூ
- படிப்புகள்: 2680
என் அப்பா ஒரு கிழட்டு வெள்ளையன்,
என் அம்மாக் கிழமோ கறுப்பு,
எப்போதேனும் என் கிழ அப்பனைத் திட்டியிருந்தால்
என் வசையைத் திரும்ப வாங்கிக் கொள்கிறேன்
எப்போதேனும் என் கறுப்பு அம்மாக் கிழத்தை
நரகத்திற்குப் போய்த்தொலை என்று திட்டியிருந்தால் ,
என் அந்தத் தப்புக்கு வருந்துகிறேன்
நல்லாயிருக்கட்டும் அவள்.
என் கிழ அப்பன் ஒரு பெரிய மாளிகையில் செத்தான்,
என் அம்மாவோ ஒரு குடிசையில் செத்தாள்.
நான் இறக்கும் போது எங்கோ இருப்பேனோ யார் கண்டார்
வெள்ளைக்காரனும் இல்லை நான், கறுப்பனும் இல்லை நான்.
- லாங்ஸ்டன் ஹ்யூ (மொழிபெயர்ப்பு : கோபால் ராஜாராம்)