நல்லோர் இயல்பு
- விவரங்கள்
- பிரிவு: மொழிபெயர்ப்பு கவிதைகள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015 21:40
- எழுத்தாளர்: மதுமிதா
- படிப்புகள்: 2867
மழை நீர் துளி
பழக்கக் காய்ச்சிய இரும்பில்
பட்டவுடன் ஆவியாகி
மறைந்து விடும்
தாமரை இலைமேல் விழுந்தால்
முத்து போல்
அழகாக தோற்றம் தரும்
கடலில் சிப்பிக்குள்
விழும் வாய்ப்பிருந்தால்
முத்தாகவே மாறிவிடும்
கீழோர்
மத்திமர்
மேலோர்
ஆகியவர்களின் இயல்பு
அவரவர் சேர்க்கையால் அமைகிறது.
(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)
- மதுமிதா