கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும்

படம்: நந்தலாலா

 

http://1.bp.blogspot.com/_Eeg1ZgkkAXA/TPEnvtrZotI/AAAAAAAAAXw/HD3rz5eB0Rs/s1600/nandalala.jpg

 

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?

உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால்தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னை இன்றி யார் வந்தது?
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

 

-மு.மேத்தா

 

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி