கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கடவுள் பாதி மிருகம் பாதி

படம் : ஆளவந்தான்

Thank you! http://www.touregypt.net/featurestories/sphinx1-16.jpg


கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால்... கடவுள் தின்று கடவுள் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...

நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மனிதன் இறையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா
தேவ ஜோதியில் கலப்பாயா?

நந்தகுமாரா....

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்வரை குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும்போது
இருதுளி மட்டும் சுடுகிறதே

நந்தகுமாரா நந்தகுமாரா
மழைநீர் சுடாது தெரியாதா?
கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான்
வெண்ணீர் துளி என அறிவாயா?
சுட்ட மழையும் சூடான மழையும்
ஒன்றாய் கண்டவன் நீதானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவள் நீதானே

- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி