கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ராசாத்தி என் உசிரு என்னதில்ல

படம்: திருடா திருடா

ராசாத்தி என் உசிரு என்னதில்ல

ராசாத்தி என் உசிரு என்னதில்ல
பூச்சூடி வாழ்க்கப்பட்டு போனபுள்ள
நீ போனா என்னுசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதிவரும் வாடிபுள்ள

காரவீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கயில
மஞ்சள அரைக்குமுன்ன மனச அரச்சவளே..
கரிசக்காட்டு ஒடையில கண்டாங்கி தொவைக்கயில
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சவளே..

நெல்லுக் களத்துமேட்டுல இழுத்து முடிஞ்சிகிட்டு
போனவ போனவதான் - புதுக் கல்யாணச் சேலையில
கண்ணீரத் தொடச்சிகிட்டுப் போனவ போனவதான்
நாந்தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு
அரளிப்பூச்சூடி அழுதபடி போறவளே

கடலக்காட்டுக்குள்ள கையடிச்சி சொன்னபுள்ள
காத்துல எழுதணும் பொம்பளங்க சொன்னசொல்ல..

தொட்டுதொட்டு பொட்டுவெச்ச சுட்டுவெரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்சகையில் வாசமின்னும் போகலையே..
மருதையில வாங்கித்தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சக்கர மாறலையே

அந்தக்கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்பதெப்போ - அந்தக் கொலுசு மணிச்சிரிப்பும்
கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கருவேலங்காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்ணு
சுதிமாறிக் கத்துதம்மா தொணயத்தான் காணோமின்னு

கடலக்காட்டுக்குள்ள கையடிச்சி சொன்னபுள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்னசொல்ல..

- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி