கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல

படம்: வேங்கை

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே
உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்கையின் வாசலே நீயேதானடி ஹொ ஹோ ஹோ

உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது உயிரில் வெடி வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும்பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்
கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடி முல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஹோ ....ஓ

பழசை மறைக்க நெனைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நானில்லையே
எதற்கு நீ என்னை தவிர்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ...ஹோ...... ஓ...........


- விவேகா

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி