கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

சின்ன மேகமே சின்ன மேகமே

படம் : மழை
சின்ன மேகமே சின்ன மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேர்த்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே சின்ன மேகமே
சேர்த்து வச்ச காச வீசு

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


விண்ணோடு மேளச் சத்தம் என்ன?
மண்ணோடு சின்னத் தூறல் என்ன?
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ ...
நீ வரும் போது நான் மறைவேனா
நீ வரும் போது நான் மறைவேனா
தரிகிட தரிகிட தா

கொள்ளை மழையே கொட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சிற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவும் பூவாக

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூக்குத்தியாகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீழ்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அணுவணுவாகி முனு முனு செய்தாயே

- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி