கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

படம்: ஆடுகளம்

 

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
திண்ண சோறும் செறிக்கவே இல்ல
புலம்புறேன் நானே…
உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேராக் கேட்கிறதே……

 

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனசே…
ஓ திருவிழா கடைகளைப்போல தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது மெறளுறன் ஏன் தானோ?
கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

 

மழைச்சாரல் விழும் வேல மண் வாசம் மணம் வீச
ஓ மூச்சு தொடவே நான் மிதந்தேன்….
கோடையில அடிக்கிற மழையா… நீ என்ன நனைச்சாயே..
இருட்டுல அணைக்கிற சுகத்தை பார்வைல கொடுத்தாயே
பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நா …

 

-ஸ்நேகன்


 

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி