கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்

படம்: யாவரும் நலம்

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது
மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம் வந்து விளையாடும்
வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்
வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே
வந்து விழும் வெண்ணிலா

அடித்தால் அன்று தானே என்று அதை
தள்ளி விட்டுச் சென்றிடுமே
தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை
அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து
இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்
அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை
ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே
- தாமரை

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி