கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்

படம் : சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகயோ மெளவல் மெளவல்

உன் பூ விழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கற்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி...

வாஜி வாஜி வாஜி – என்
ஜீவன் நீ சிவாஜி
வாஜி வாஜி வாஜி – என்
ஜீவன் நீ சிவாஜி

அன்பா… வாளை எடு
அழகைச் சாணையிடு!
உன் ஆண்வாசனை
என் மேனியில்
நீ பூசிவிடு!!

அடி நெட்டை நிலவே…
ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு…
*

ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேனிலவெ
ஒரு நிலவுடன் தான் அவள் யாருமில்லை
இதோ இதோ இவள் தான்…

புன்னகைப் பேரரசே…
தேன் குழைத்து
பூவுக்குள் குளிப்பீரா?
விடியும் வரை
மார்புக்குள் இருப்பீரா?
விழிகளுக்குள்
சிறுதுயில் கொள்வீரா?

பெண்களிடம்
சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி…
*

பொன் வாக்கியமே…
வாய் வாத்தியமே…

உன் வளைவுகளில்
உள்ள நெளிவிகளில்
வந்து ஒளிந்துகொண்டேன்
சுகம் சுகம் கண்டேன்!

ஆனந்த வெறியில் நான்
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி…
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கி விட்டேன்

ஆடடடா…..
குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ….
- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி