கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு

படம் : சதுரங்கம்

சதுரங்கம்
எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்த்தை இல்லை
ஏன் இந்த துன்பம் உன்னை காணவில்லை

நீயா இன்பம் நீயே இன்பம்
நீயில்லாமல் எதுவும் துன்பம்
காதல் நம்மை சேதம் செய்தால்
யாரை நோவது
நீயா உண்மை நீயே உண்மை
நீயில்லாத உலகம் பொம்மை
காலம் நம்மை நோக செய்தால்
போதும் வாழ்வது
உதிராத ஞாபகம் ஒரு கோடி நீ தர
வரவான வேதனை செலவாகும் நீ வர
நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்

காலை தந்தாய் மாலை தந்தாய்
காதல் பேசும் பொழுதும் தந்தாய்
வானம் தந்தாய் நீலம் தந்தாய்
யாவும் நீயடி
தூரல் தந்தாய் தூக்கம் தந்தாய்
தூர்ந்திடாத ஏக்கம் தந்தாய்
வாசம் தந்தாய் வாழ்வும் தந்தாய்
சுவாசம் நீயடி
அழகான பூமுகம் அகலாது காதலி
அணையாது கார்த்திகை துணையாகும் மார்கழி
நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைந்தேன்
எங்கு தொலைத்தேன்

- யுகபாரதி

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி