கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

காதலிக்கும் ஆசை இல்லை

படம் : செல்லமே
காதலிக்கும் ஆசை இல்லை
காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூதது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்

என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுகொள்ள கிட்ட வந்தால்
திட்டி திட்டி தித்தித்தாய்

சந்திர சூரியர் எழுதயிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் நிலவு வருகயிலே
அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே, விரிகிறதே ஹே ஹே
அட வின்னும் மண்ணும் உனகுள்ளே விளம்பரமா
நீ வெளிச்சத்தில் செய்து வெய்த ஒளி சிற்பமா

மன்மத மொட்டோ, நான் வருடும் காற்றோ
மன்மத மொட்டோ, நான் வருடும் காற்றோ

உன் முகம் கொண்ட பருவினுலும்
வின்மீன் ஒலிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி

மின்னுதடி எனை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும்
வானம் ஒன்றுதான்
உனை எந்த பக்கம் பார்க்கும் போதும்
பெண்மை நன்றுதான்

உயிர் விடும் முன்னே எனை காதலி பெண்ணே
உயிர் விடும் முன்னே எனை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசை இல்லை
கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோட ஒட்டி கொள்ளும் பட்டு ரோஜா நானல்லா
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உனை ஏனொ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியாய் இந்த
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி…

- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி