கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

படம்: Mr. ரோமியோ
Thaneerai Kadhalikum
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது ஐயய்யோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க சொல்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்

- வைரமுத்து

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி