கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ஒரு பொன் மானை நான் காண

சலங்கையிட்டாள் ஒரு மாது
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழ ரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்


தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதியிவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு
பூப்போலப் பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது – எந்தன்
மனம் எங்கும் மணம் வீசுது


சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையில் பின்னழகில்
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது

- டி. ராஜேந்தர்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி