கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே

படம்: பூ
ஆவாரம் பூ

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதுடா…
குழந்தை கால ஞாபகத்தில்..
இதழ்கள் விரித்தே கிடக்குதுடா….
நெடுநாள்… அந்த நெருக்கம்
எனக்கே அதை கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தையல்ல மெளனமாகும்…

ஆயுள் முழூதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலை ஆகி தவிழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…
பனியில்.. அது கிடக்கும்…
நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்…
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுசென்ற பட்டுபூவும்

- நா. முத்துக்குமார்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி