கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

வாராயோ வாராயோ காதல் கொள்ள‌

படம்: ஆதவன்


வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்

ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை

உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ரல்லா

வாராயோ வாராயோ காதல் கொள்ள..

நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே

நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி

நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
- தாமரை

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி