கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

படம்: கண்ணுக்குள் நிலவு

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால்
தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்
அச்சச்சோ...

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ?
அன்னையில்லா பிள்ளை கண்டால்
பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பே இல்லா உலகம் கண்டால்
அச்சச்சோ...

- பழனிபாரதி

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி