ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2009 19:00
- எழுத்தாளர்: கவிஞர் வாலி
- படிப்புகள்: 1640
படம் : தாய் மூகாம்பிகை
(சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)
ஆ...ஆ.....
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும்பூங் கழலே மலை மாமகளே
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
- கவிஞர் வாலி