கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
ஆழகாய் அய்யோ தொலைந்தேன்

( காதல் வைத்து )

தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்

( காதல் வைத்து )

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

( காதல் வைத்து )

- நா.முத்துக்குமார்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி