சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 13 ஜூலை 2009 19:00
- எழுத்தாளர்: கவி கா.மு.ஷெரீப்
- படிப்புகள்: 3565
படம் : டவுன் பஸ்
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா? – என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே
பட்டு மெத்தை விரிச்சு வச்சேன் சும்மா கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கெடக்குது
தலையை வாரி பூ முடிச்சேன் வாடி வதங்குது – சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கெடக்குது
வழியை வழியை பாத்து பாத்து கண்ணும் நோவுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது (சிட்டுக்குருவி)
- கவி கா.மு.ஷெரீப்