கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

காதல் செய், காதல் செய்

படம் : அறை எண் 305ல் கடவுள்
 
காதல் செய், காதல் செய்
கண்ணில் பட்டதை காதல் செய்.
 
காதல் செய், காதல் செய்
உன்னில் உள்ளதை காதல் செய்.
 
காதல் செய், காதல் செய்
மஞ்சள் வெயிலை காதல் செய். ஹோய்..
 
காதல் செய், காதல் செய்
வெள்ளை மழையை காதல் செய்.
 
திண்ணை வைத்த வீட்டை,
சிட்டுக்குருவி கூட்டை,
தாடி வைத்த ஆட்டை காதல் செய்.
 
வண்ணப்பூக்கள் தோட்டம்,
வெள்ளிப் பனிமூட்டம்,
விண்ணில் மேகக்கூட்டம் காதல் செய்.
 
வாழும்.. வாழ்வை.. நீ காதல் செய்.
ஓடும்.. ஆற்றை.. நீ காதல் செய்.
போகும்.. ஊரை நீ காதல் செய், காதல் செய்.
 
காதல் செய், காதல் செய்
கண்ணில் பட்டதை காதல் செய்.
 
காதல் செய், காதல் செய்
உன்னில் உள்ளதை காதல் செய்.
 
நான் என்ற அகந்தை துளியும் இன்றி உயர்ந்த மலைகள்,
கால்மிதித்த இடத்தில் பாத சுவட்டை அழிக்கும் அலைகள்,
 
மாட்டுக்கொம்பில் கட்சி பாசம்,
டாட்டா காட்டும் குழந்தை நேசம்,
காற்றில் வரும் மீன்கள் வாசம்
இதையும் காதல் செய்.
 
காதல் செய், காதல் செய்
கண்ணில் பட்டதை காதல் செய்.
 
காதல் செய், காதல் செய்
உன்னில் உள்ளதை காதல் செய்.
 
யார் மூச்சை சுமந்த காற்றில் மிதக்கும் பலூனின் பயணம்.
நார் ஆகும் வாழ்வில் பூத்துச்சிரிக்கும் வாழைத்தோட்டம்.
 
பனை மர ராணுவ வரிசை
படித்துறை ஒற்றை கொலுசை,
ஆண்டன முளைத்த குடிசை
இதையும் காதலிப்போம்.
 
காதல் செய், காதல் செய்
கண்ணில் பட்டதை காதல் செய்.
காதல் செய், காதல் செய்
உன்னில் உள்ளதை காதல் செய்.
 
திண்ணை வைத்த வீட்டை,
சிட்டுக்குருவி கூட்டை,
தாடி வைத்த ஆட்டை காதல் செய்.
 
வண்ணப்பூக்கள் தோட்டம்,
வெள்ளிப் பனிமூட்டம்,
விண்ணில் மேகக்கூட்டம் காதல் செய்.
 
வாழும்.. வாழ்வை.. நீ காதல் செய்.
ஓடும்.. ஆற்றை.. நீ காதல் செய்.
போகும்.. ஊரை நீ காதல் செய், காதல் செய்.
 
- நா முத்துகுமார்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி