இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012 19:00
- எழுத்தாளர்: பரணர்
- படிப்புகள்: 2312
குறிஞ்சி - தலைவன் கூற்று
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே.
-பரணர்