பழந்தமிழ் கவிதைகள்
குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 13 மார்ச் 2010 18:00
- எழுத்தாளர்: கபிலர்
- படிப்புகள்: 1175

வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
குறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 20 பிப்ரவரி 2010 18:00
- எழுத்தாளர்: கழார்க்கீரனெயிற்றி
- படிப்புகள்: 1258
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
- கழார்க்கீரனெயிற்றி
Add a commentகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 06 மார்ச் 2010 18:00
- எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ
- படிப்புகள்: 1267

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
குறுந்தொகை : மருதம் - தோழி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 13 பிப்ரவரி 2010 18:00
- எழுத்தாளர்: கொல்லிக் கண்ணனார்
- படிப்புகள்: 1264
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.
- கொல்லிக் கண்ணனார்
Add a commentகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 27 பிப்ரவரி 2010 18:00
- எழுத்தாளர்: பரணர்
- படிப்புகள்: 1307
துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே.
- பரணர்
Add a commentகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 06 பிப்ரவரி 2010 18:00
- எழுத்தாளர்: படுமரத்து மோசிகீரனார்
- படிப்புகள்: 1256
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.
- படுமரத்து மோசிகீரனார்
Add a comment