குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன

View Comments

குறுந்தொகை:. மருதம் - தலைவி கூற்று

Indian-motifs-11

குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன 

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் 

நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் 

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் 

 கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் 

 யாணர்ஊரன் தன்னொடு வதிந்த 

 ஏம இன்துயில் எடுப்பி யோயே. 

 

-மதுரைக் கண்ணனார்.