குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 13 மார்ச் 2010 18:00
- எழுத்தாளர்: கபிலர்
- படிப்புகள்: 1177

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
- கபிலர்