குறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று

View Comments

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.

- படுமரத்து மோசிகீரனார்