குறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 30 ஜனவரி 2010 18:00
- எழுத்தாளர்: அள்ளூர் நன்முல்லையார்
- படிப்புகள்: 1326
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
- அள்ளூர் நன்முல்லையார்