கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதைகள்

நாகரிகம் ஏனோ இன்னும்?

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

நாகரிகம் ஏனோ இன்னும்?

 

காலம் கடந்து உயிர் மூச்செறிந்து
வானம் பொசுங்கியது
வைகுண்டம் முதல் வங்கம் வரை
பேரதிர்வு
புத்தி பேதலித்துப் போன
மனிதக்கூட்டம்
சுத்திச் சுத்தித் தலையாட்டியே
வாழ்க்கையைத் தொலைத்து கால்நூறாண்டுகள்
கடந்து விட்டன

வானுயர்ந்த மரங்களும் பத்தைகளும்
அழிக்கப்பட்டு
சூழல் சுத்தம் பெற்றுத்தான் என்னவோ
இதனால் மீதியில் தொலைந்துபோனது
இயற்கையும் மனிதத்தலைகளும் தான்

காகம் இருக்க பனம்பழம் விழுந்ந கதை
மீண்டும் மேடையேறியது
தெளிவற்ற கருத்துக்கள்
முடிவுகள்
மனித வம்சத்தையே புதைக்க
ஊன்றுகோலாகியது இப்போதான்
போர்க்கால மேகங்கள் மெல்ல
விலகுமென இருக்க
போருக்கான ஆயத்தங்கள் ஏன் இன்னும்?

பகட்டான வாழ்க்கை
பாதகர் யாரும் உய்யவே வேண்டாம்
உங்கள் வாயசைப்புக்கள்
இன்னும் இன்னும் எத்தனையோ
பாதகர்களை உரமிட்டுச் செல்லும்

பேதமின்றி சமத்துவம் தொலைந்து
போன பின்னும்
நாகரிகம் ஏனோ இன்னும்?


- எதிக்கா

Add a comment

கடலில் வந்த காதல்

பயனாளர் மதிப்பீடு: 2 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

கடலில் வந்த காதல்

 

என் தேவதையை
எங்கிருந்து
கடத்திவந்தாய் கடலே ?

சுனாமியே!
சுற்றியிருந்தவர்களையெல்லாம்...
கால்பிடித்து இழுத்து சென்றாய்!
எங்கிருந்தவளையோ...
காதல் பிடித்து அழைத்து வந்தாய்!

காதலித்தால்
சமூகம் எதிர்க்கும் என்றா
சமூகத்தை அழித்துவிட்டு...
எங்களை காதலிக்க வைத்தாய்?

தீவு தாண்டி வந்த
வே!

எந்த தேசத்தில் நீ இருந்தாலும்
என்னைத்தான் சேரவேண்டும்; என
கடவுள் கடலுக்கு
கட்டளையிட்டுவிட்டானா..?

கடல் பொங்கியதால்...
காதல் தங்கியதா ?
இல்லை நம்மில்
காதல் தங்குவதற்காக...
கடல் பொங்கியதா ?

இன்றைய காதல்கள் எல்லாம்
முடிவில் தத்தளிக்கிறது..
ஆனால் இங்கேயோ
ஒரு
தத்தளிப்பில்தான் காதலே
அரங்கேறியிருக்கிறது!


சுனாமியில்...
காணாமல் போனவர்களின் பட்டியலிலே
என்
இதயமும்...
இணைந்து கொண்டது!

அலைகள் அடித்துப் போட்டதில்
காயப்படட்டவர்களுக்கு மத்தியில்...
நாம்
காதல்பட்டிருக்கிறோமடி!.

ஒன்றாய் இருந்தவர்களையெல்லாம்...
பிரித்துவிட்டது!
பிரிந்துஇருந்த நம்மை...
ஒன்று சேர்த்துவிட்டது!

சுனாமியே ! சொல்
நீ
காதலுக்கு எதிரியா?
நண்பனா?

அழுகின்றவர்களின்
ஆறுதலுக்காக...
எங்கள் காதலை
நினைவுச்சின்னமாக்கிவிட்டாயோ?


திருமணம்...
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்!
இங்கே
காதல்...
சுனாமியால் நிச்சயிக்கப்பட்டது !

அழாமல் வாடி! - மீண்டும்
அலைப்பக்கம் போவோம்!

நம்
இதயம் இணைத்த ...
கடலில்
கால்கள் நனைப்போம் வாடி!

ஆம்! இப்பொழுது
கடல் நமக்கு...
கல்யாண பரிசு!

- ரசிகவ் ஞானியார்

Add a comment

வெற்றுக் கோப்பை

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

சிலரது கோப்பையில்

 

சிலரது கோப்பையில்
பால்
நிறைந்த வண்ணமாய்.........

சிலரது கோப்பையில்
தேன்
வழிந்த வாராய்..........

சிலரது கோப்பையில்
கசாயம்
குறைந்தபாடில்லை

இன்னும்
சிலரது  கோப்பையில்
எந்நேரமும்
மது ததும்பல்

எது
நிறைந்தென்ன

ஒரு நாள்
வெறுமையடைந்து விடுகிறது
எல்லோருடைய கோப்பையும்

- புதிய ராஜா

Add a comment

கொடுக்கிறேன்...

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

 

கொடுக்கிறேன்

 

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்

கொடு
நீ சுகப்படுவாய்

கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும்

- கவிக்கோ அப்துல் ரஹ்மான்

 

 

 

 

Add a comment

வருக வருக கி.பி.2013!

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

மாயன் பாடிய
முகாரிக்கு
முடிவுறை எழுதி
பூபாளம் பாடி
புத்தொளி வீச வரும்
புத்தாண்டே வருக...!

இருண்ட தமிழகம் ஓளி பெற
வறண்ட மேகங்கள்  
கருமேகமாய் மாறி
திரண்டு வந்து மாரியாக - கரை
புரண்டு ஓட...
புத்தாண்டே வருக...!

‘சந்தர்ப்பம்’ என்ற
புத்தம் புதிய புத்தகத்தின்
முதல் அத்தியாயமாக
புது வருட முதல் நாள்....!

நாம் எழுதப் போகும்
வார்த்தைகளுக்காக
எழுத்துகள் இன்றி
எதிரில் விரிக்கப்பட்டிருக்கிறது...!

புதுமையைப் படைப்போம்
புரட்சியை வித்திடுவோம்
இத்தரை வீதியில்
முத்திரை இடுவோம்...!

வருக வருக கி.பி.2013....!
தருக தருக சுபிட்சத்தை...!

- ரிஷ்வன்

Add a comment

சுதந்திர தினம்

பயனாளர் மதிப்பீடு: 3 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

சுதந்திர தினம்

உன் குலம்
அழிஞ்சேபோச்சுன்னு
குதிச்ச
நா குளத்துல
கைய வச்சதுக்கு

கொச கொசன்னு
வழியிர குருதி காயத்தோட
அண்ணன் பிணம் வந்தப்போவ
அடிவயித்த புடிச்சிகிட்டு
அப்பவே போயிட்டா ஆத்தா

அடிச்சி புடிச்சி
அப்பனுக்கும் போட்டானுவோ
பொய் வழக்குகள

மேல் சட்டையே போடவிடாம
பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
கையில குடுக்குற
இத்துனூண்டு
கொடியும் குண்டூசியும்

கேடுகெட்டு நா
கொண்டாடனுமா
சுதந்திர தினம்

- கவிமதி

 

 

 

 

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி