கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை கவிதைகள்

நூறாவது முறையாய்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்நான் விழித்ததும்
நீ காபிகொண்டு
வரும்போது உன்னை
இருக்க கட்டி கொண்டு
அந்த சப்தமில்லாத
முத்தம் உன் சிணுங்கல் !!
தலை துவட்ட
நான்
துண்டு கேட்கும் போது
மறுபடியும்
நாம் குளித்த நாட்கள் !!
பணிக்கு செல்ல
மனமில்லாமல்
நிற்கும் எனக்கு
நீ முத்தம்
தந்து வழி
அனுப்பும்
அந்த நேரம் !!
மனம் வீட்டிலும்
உடல் பணியிலும்
மாலைக்காக
நான் ஏங்கும்
அந்த பணியிட நாட்கள் !!
இத்தனை அழகா
என நான் தினமும்
வியக்க என்னை
வரவேற்கும்
உன் புன்சிரிப்பு !!
உன் முகம் என்ன
மாயகண்ணாடியா
பார்த்தவுடன் என்
கவலைகள்
மறைந்து போகின்றன !!
நம் ஊடலுக்கு
சான்றாக நம்
குட்டி தேவதை
ஆம்...
உன்னை விட அழகாய்!!
நான் உனக்காகவும்
நீ எனக்காகவும்
விட்டு கொடுத்து
வாழ்ந்த அந்த வாழ்க்கை !!
ஒவ்வொரு நாட்களும் தேன் !
சூரிய ஒளி
கண்ணில் பட விழித்தேன் !
இந்த கனவு நினைவாக
இன்றாவது காதலை
சொல்லி விட வேண்டும் !!
தைரியமின்றி
சபதமெடுத்தேன்
நூறாவது முறையாய் !

- மனுநீதி

Add a comment

காதலாகி

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

கருவமரத்துப் பிசினில்
சிக்கியிருந்த
வண்ணத்துபபூச்சியை
எடுத்துப்
பறக்க விட்டபோது
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டது
காதல்

நான்
பணியில் ஆழமூழ்கியிருந்தபோது
நண்பன்
கொண்டு வந்து கொடுத்தான்
உன்மடலை
பிரிக்காமலே படித்துக்கொண்டிருந்தது
மனசு

- இ.இசாக்

Add a comment

அழைப்பிதழ்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

என் கையெழுத்தைப் பார்த்ததும்
கண்டுபிடித்து விடுவாயோ !

சிறுமூளையின் ஏதோ ஒர் அறையில்
சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச்
சிறகடிக்கச் செய்வாயோ !

பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்துப்
பரிச்சயம் ஆன அந்த நாள் முதல்....
படிக்கட்டில் அமர்ந்து பாடங்களையே
படிப்பதாய் பாவணைகள் செய்த அந்த நாள் முதல்...!

'எனக்காக இதைச் செய்யக் கூடாதா?'
ஏக்கமாய்க் நீ கேட்ட அந்த நாள் முதல்...

அந்த மழை நாளில்...
கல்லூரிப் பருவத்தின் கடைசி நேரத்தில்...
'இன்றாவது சொல்லிவிட மாட்டாயா?’

என்ற எதிர்ப்பார்ப்புடன்...
எதார்த்தமாய்க் கைகுலுக்கி..
என்றும் போல் புன்னகைத்துப் பிரிந்த,

அந்த கடைசி நிமிடம் வரை...
அத்துனையும் உன் நினைவிற்கு வருமோ !

உனக்கான விழா அழைப்பிதழை
அஞ்சல் செய்து விட்டு,
உன் இருக்கையை வெறித்தபடி நான்...!

யார் கண்டது?

இந்நேரம் உன் இருப்பிடம் கூட
இடம் மாறி இருக்கலாம்!

- ஆ.மணவழகன்

Add a comment

நிழல் தரும் மலர்ச்செடி

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

இடையில் சிறுத்த
கரிய
அழகிய
அதன் நிழலுக்காகத்தான்
அந்தச் செடியை
நான் வாங்கினேன்
நிழலில் கூட அது
கறுப்பு மலர்களை
பிறப்பித்திருந்தது
நிழலுக்காகத்தான்
அந்த மலர்ச்செடியை
நான் வாங்குவதாக
உன்னிடம் சொன்னபோதே
மர்மப் புன்னகை
பூத்தாய்
செடியை நான்
மடியில் வைத்து
பேருந்தில் அமர்ந்தபோதுதான்
பார்த்தேன்
நிழலின்றிச் செடி
அம்மணமாய் இருந்ததை.
உடனே நான்
உன்னிடம் ஓடி வந்தேன்
செடியை நீ
நிழலின்றி
கொடுத்ததைச் சொன்னேன்
வெட்கமின்றி நீ
வாய்விட்டுச் சிரித்தாய் –
இங்கேயும் இல்லை பார்
அச்செடி நிழலென்று.
பெண் வியாபாரத்தில்
ஆண் சொல்
அம்பலம் ஏறுமா?
சோர்வுடன் நான்
வீடு திரும்பி
வாசலில் செடியை வைத்தேன்
என் சோகம்
பொறுக்காமல்
மறைத்து வைத்திருந்த
நிழலை
விரித்துச் சிரித்தது
சிறு குழந்தையைப்போல்
செடி

- சேயோன் யாழ்வேந்தன்

Add a comment

மூன்றாம் பரிமாணம்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

மனித இயங்குதலில்

முதுகெலும்பு

விரைவுகளில்

வாகனங்கள் இவை

மையமாய்க் கொள்ளும்

சங்கிலி

 

மூன்று ராட்சதக்

கண்ணிகளில்

காலத் தொடர்ச்சி

நினைவு அடுக்குகளில்

மூன்றாம் பிறையாய்

சில

 

பசுமை விரியும் காடுகள்

மண்ணுள் விரையும் வேர்கள்

எதன் கண்ணிகளும் ஆகா

அவை

உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள்

 

பிணைத்து நெருக்கி

வழி நடத்தும்

உறவு பணியிடச் சங்கிலிகள்

அதிர்ச்சிப் புதிராய்

அவ்வப்போது விலக

மின்னி மறையும்

விரியும் நீள் பெருவழி

 

பாதுகாப்பு

தளை

சங்கிலியில்

கட்புலனாகும் இரு

பரிணாமங்கள்

 

வெவ்வேறு இரவுகளை

வெட்டித் துண்டுகளைக்

கண்ணிகளாய்

வார்த்துப்

பிணைக்கும் மாயை என்னும்

மூன்றாம் பரிணாமம்

 

- சத்யானந்தன்

Add a comment

நாட்காட்டி

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே
கிழித்துப்போடும் எமக்கு
கடந்த பொழுதுகளின்
நிகழ்வுகளின் நினைவுகளை
மறந்துவிடத் தெரிவதில்லை.

நாட்கள் ஏனோ
அத்தனை
வேகமாகத்தான் போகிறது.

நிகழ்வுகளின்
நினைவுகள் மட்டும்
ஏனோ முடிவதில்லைத்தான்.

அழுகிறோம் .
சிரிக்கிறோம்.
அனலாகிறோம்.

ஆனாலும்
புதிதாய் வரும்
ஆண்டின் நாட்காட்டியை
ஏற்கத் துடிக்கும்
சுவரில் அறைந்த
ஆணிபோல் தான்
நாமும்.

- நளாயினி தாமரைச்செல்வன்

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி