கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை

புலம்பெயர் பிரிவு

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

 

பூக்களில் தினமும் உன் புன்னைகை பார்கிறேன்
தென்றலில்உன் சுவாசம் தேடி வேர்க்கிறேன்
நீ மிகவும்   என்  அருகில் இருக்கிறாய்
                         நினைவுகளில்
தினமும் கன்னம் தொடுகிறாய்
தலை கோதிச்செல்கிறாய்.
                        கனவுகளில்.
உறக்கம் தொலைத்த இரவுகளுடன்
ஏக்கம் நிறைத்து நகர்கிறது வாழ்க்கை
காட்டில் எறித்த நிலவாய்கழிகிறதென் இளமை
காதலர் தினம் வருகிறது
காதலன் நீ தான் வரவில்லை
உன் றிங்கிங் ரோனாய்   அடிக்கிறது என் இதயம்
ஸ்கைப்பில் தெரியும் உன் விழியில்
என் காதலை தேடுகிறேன்
எழும் ஆவல் கரைகடக்க கண்ணாடி தடவுகிறேன்
காற்றாய் மாறி உன் கன்னம் தழுவேனா
காலம்  சுருங்கி  உன் வருகை நாளை நிகழாதா
என் காதல் நெருப்பில்
இந்த கடல் வற்றி போகாதா
காலால் நடந்து கரை சேர மாட்டேனா
நம் இடை வெளிகள் குறுகாதா 
இதயம் ஒன்றாய் சேராதா.-----

 

-வேலணையூர்-தாஸ்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி