கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை

பாரதி வாழி!

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 
பாரதி வாழி!
பாரதிபோல் பாரதனில் பார்த்ததுவும் உன்டோ ? - நம்
பாரதத்தைப் பாட்டதனால் பாலித்தவர் உண்டோ ?
பா-ரதத்தில் ஏறியே பவனியவன் வந்தான் - நல்
பாரதத்தை உய்வித்திட பாடல்பல தந்தான்!

சுதந்திரத் தேரதனில் சாரதியாய் நின்றான் - பெண்
சமத்துவத்தை யேதனது சுவாசமெனக் கொண்டான்!
மதவெறி கொண்டோரின் முகத்தினிலே உமிழ்ந்தான் - பொய்
நிதம்கூறித் திரிவோரை நிந்தனைகள் புரிந்தான்!

கந்தைக்குக் கூடகையில் காசிலாமல் கிடந்தான் - நம்
சிந்தைக்கு சிந்துதந்து பாவரசாய் நடந்தான்!
எந்தையர் நாடிதென எண்ணத்திலே பதித்தான் - வெறும்
மந்தையான மக்கள்மனம் மாறிடவகை உரைத்தான்!

மேலிவன் கீழிவனென மனிதருள் உண்டோ? - இம்
மடமைதனைப் போக்கிநல் மாண்பினை வளர்த்தான்!
ஆழ்கடலும் மலைகளுமே அரும்தோழர் என்பான் - சிற்
அறிவுயிர் ஆயினும் அன்போடு அணைப்பான்!

தமிழ்வாழ வேண்டும்மெனத் தினம்தினம் நிணைத்தான் - இவன்
தான்வாழ நிணையாதத் தூயவனாய்த் திகழ்ந்தான்!
அமிழ்தினும் இனியதமிழில் அரும்கவிகள் குவித்தான் - இவன்
அச்சமது மடமையென அஞ்சாமை விதைத்தான்!

ஒப்பில்லா உலககவி யெனவேதான் உயர்ந்தான் - நம்
ஒருமைப்பாடு ஓங்கிடவே ஓய்வின்றி உழைத்தான்!
செப்பும்கவி யாவும்நம் சிந்தணையை ஏற்றும் - இவன்
செத்தான் என்பதில்லை சிரஞ்சீவி தான்நாளும்!

- பாண்டூ

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி