கவிதை

சூரிய விளக்கே

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
View Comments
சூரிய விளக்கே
சூரிய விளக்காம் சந்திரனே!-உனைச்
சீர்தூக்க மறந்தார் எம்சனமே!
பாரினில் உனெழில் பாடிடுவார்-பாடம்     
பார்த்து பயிலா தோடிடுவார்!

கதிரவன் ஒளியை நீதேக்கி-தக்க    
காலத்தில் புவியின் இருள்நீக்கி
மதியே! நின்மதி காட்டிடுவாய்-மர
மண்டைகள் உறைக்கக் கொட்டிடுவாய்!

தேயுரும் மதியே! நின்மதியை-சற்று
தொலைத்தே தேடினோம்  நிம்மதியை!
மேயுரும் செம்மறி ஆடுகளாய்-இந்த
மேதினியிர் வாழ்ந்தோம் கூடுகளாய்!

அணுஉலை ஆயிரம் கட்டிவைத்தோம் - இந்த
அவணியில் ஆபத்தை நட்டிவைத்தோம்!
அணுஉலை அயலவர் வாணிகமே- இதை
அறிந்து மதிவழி பேணுகவே!

- பாண்டூ