கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை

இறப்பின் சிலகணங்களின் பின்..

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 
இறப்பின் சிலகணங்களின் பின்..

அண்ட வெளியெங்கும்
அல்லாடித்திரிஞ்சு
காதுகிழியும் வரை
ஓலமிட்டு ஓலமிட்டு
விதியோடும்
மதியோடும்
போட்டியிட்டு
களைத்தவளானேன்

சுற்றியிருந்த இருளில்
நட்சத்திரங்களின்
பிரகாசம் கடுகளவானது
விண்கலங்களின்
அதிர்வொலிகள்
அண்டவெளியெங்கும்
அதிர்ந்து கொண்டேயிருந்தது
சுற்றியிருந்தவர்களின்
உருவங்கள்
பார்வைக்குளிருந்து
வெளிறிப்போய்
சற்றுக் கணங்கள்கூட
ஆவதன் முன்
விண்வெளியினூடே
பயணம் சொல்லிலடங்கா
வேகத்துடன்
ஆரம்பமானது

எங்கே தான் போகிறேன்?
வினாவுக்கே விடைதெரியவில்லை
பீதி பெருக்கெடுக்க
பழகிய பாசங்கள்
நினைவினில் நீழமாக
இத்தனைக் கூடாகவும்
நாதியற்ற மனிதனாய்
பரந்திருந்த பால்வீதியிலே
பயணித்துக்கொண்டிருந்தேன்
என்
மூர்ச்சையை நிறுத்திவிட்ட
உடலைவிட்டுப் பிரிந்து

- எதிக்கா

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி