கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை

கடவுள்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
கடவுள்

கடவுள்கள் மீதான நம்பிக்கைகள்
அற்றுப் போய்விடுகின்ற வேளைகளில்
எம்மை மீறிய ஓர் சக்தி
தன்னை கடவுள் என
அடையாளப்படுத்திவிட்டுச் செல்கிறது

அது இயற்கையின் உருவாய்
சுனாமியாகவோ
சூறாவளியாகவோ
வெள்ளப்பெருக்காகவோ
இருந்துவிடுகிறது

சிலவேளைகளில் அது
ஒளிப்படங்களாய்
காணொலிகளாய்
ஏன் சேனல் 4 ஆகக் கூட தன்னை
கடவுள் என…
அடையாளப்படுத்திவிட்டுச் செல்கிறது
அப்போது கடவுள்கள் மீதான நம்பிக்கை
மீண்டும் மெல்ல துளிர்விட ஆரம்பிக்கிறது.

- கலியுகன்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி