அப்துல் ரகுமான்
- விவரங்கள்
- பிரிவு: கவிஞர் பக்கம்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 15:39
- எழுத்தாளர்: இணைய மேலாளர்
- படிப்புகள்: 4576

கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் அப்துல் ரகுமான், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
கவிதைத் தொகுப்புகள்
* பால்வீதி
* நேயர் விருப்பம்.
* பித்தன்
* ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
* சுட்டுவிரல்
கட்டுரைத் தொகுப்புகள்
* நெருப்பை அணைக்கும் நெருப்பு
* இல்லையிலும் இருக்கிறான்
* இது சிறகுகளின் நேரம்
* முட்டைவாசிகள்.
* ஆறாவதுவிரல்
( நன்றி : விக்கிபீடியா )