கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 
namakalkavi
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
தோற்றம் : 1888-10-10
மறைவு : 1972--08-24

தந்தை வெங்கட்ராமப் பிள்ளை, தாய் அம்மணி அம்மாள் ஆகிய இருவருக்கும் 19.10.1888 இல், நாமக்கல்லில் பிறந்தார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். ‘வந்தே மாதரம்’ பாடலின் மூலம் தமது இளமையிலேயே சுதந்திர உணர்வைத் தூண்டப்பெற்றவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் காந்திஜியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்மை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும் `பத்மபுக்ஷன்’ பட்டமும் பெற்றவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வெங்கட்ராமர், இள வயதில்     மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார். இவர் ஏழு பெண் குழந்தைகளுக்குத் தந்தை. ஒருமுறை, வெங்கட்ராமர், தம்     வேலை தொடர்பாக, காவல் துறை ஆய்வாளர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தார். ஆய்வாளரின் மூன்று வயது ஆண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த வழியே வந்த குதிரை வண்டி ஒன்றின் கீழ்க் குழந்தை அகப்பட்டுக்கொண்டது. வண்டிக்காரன் வண்டியை நிறுத்த முடியாமல் திணறிக்
கொண்டிருந்தான். இதைப் பார்த்த வெங்கட்ராமர் ஒரே தாவாகத் தாவிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். அவ்வண்டியில்     வந்தவர் ஆய்வாளர் சுந்தரராசுலு தான். தன்     குழந்தையைக்     காப்பாற்றிய வெங்கட்ராமரைப் பாராட்டி அவருக்குப் காவல்துறைப் பணிக்குப் பரிந்துரைத்தார். அந்த     வேலையில்     சேர்ந்த வெங்கட்ராமர் பின்
தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றார். இந்தச் சூழலில்தான்     வெங்கட்ராமருக்கு     எட்டாவது குழந்தையாகப்     பிறந்தார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்.
‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தரும் மன்னராக, அரசவைக் கவிஞராக விளங்கினார். இதற்குக்
காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.

கல்வி

ஆரம்பக் கல்வி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்.
உயர்நிலைக் கல்வி : கோவை மெட்ரிகுலேஷன் பள்ளி.
கல்லூரிக் கல்வி : பிஷப் ஈபர் கல்லூரி, திருச்சி.

திருமணம்

கவிஞருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி முத்தம்மாள். அவர் வயிற்று வலியால் 1924இல் இறந்து விடுகிறார். அவர் வேண்டுகோளுக்கேற்ப, அவர்தம் தங்கை சௌந்தரம்மாளை மணக்கிறார் கவிஞர். அவர் மூலமாகப் பிறந்த குழந்தைகள் ஐவர். பெண்கள் இருவர்; ஆண்கள் மூவர்.
இராமலிங்கம் பிள்ளை, தம் நண்பரும் சிறந்த வழக்குரைஞருமான நாகராஜ ஐயங்காரின் தூண்டுதலால் திரு. இராமகிருட்டிணர், திரு. விவேகாநந்தர், திலகர், அரவிந்தர், லஜபதிராய் முதலிய தலைவர்களைப் படமாக வரைந்தார். அந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி அமைத்தார். ஓவியப் புலமை கைவரப் பெற்றவர் கவிஞர்  இராமலிங்கத்தின்     ஆசான் திரு.வி. லட்சுமணன்     தம் வேலையிலிருந்து     ஓய்வு பெற்றபோது அவருடைய படத்தை நாமக்கல் நகர மண்டபத்தில் திறந்து வைக்க, அவருடைய மாணவர்கள் விரும்பினர். அதற்கு இராமலிங்கம் பிள்ளை படம் வரைந்து கொடுத்தார். அப்படம் நகர மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் துறையில் வருவாயும், வெற்றியும் இராமலிங்கத்துக்கு தேடிக் கொடுத்த படம் இதுவாகும்.

கவிதை

 1. தேசபக்திப் பாடல்கள், 1938
 2. பிரார்த்தனை, 1938
 3. தமிழன் இதயம், 1942
 4. காந்தி அஞ்சலி, 1951
 5. சங்கொலி, 1953
 6. கவிதாஞ்சலி, 1953
 7. மலர்ந்த பூக்கள், 1953
 8. தமிழ்மணம், 1953
 9. தமிழ்த்தேன், 1953
 10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960
 11. அவனும் அவளும்


உரைநடைக் கட்டுரைகள்

 1. தமிழ்மொழியும் தமிழரசும், 1956
 2. இசைத்தமிழ், 1965
 3. கவிஞன் குரல், 1953
 4. ஆரியராவது திராவிடராவது, 1947
 5. பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948
 6. திருக்குறள் - உரை
 7. கம்பன் கவிதை இன்பக் குவியல்

 

புதினம்

 

 1. மலைக்கள்ளன், 1942
 2. தாமரைக்கண்ணி, 1966
 3. கற்பகவல்லி. 1962
 4. மரகதவல்லி, 1962
 5. காதல் திருமணம், 1962
 6. மாமன் மகள்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி