சி.சுப்ரமணிய பாரதியார்
- விவரங்கள்
- பிரிவு: கவிஞர் பக்கம்
- வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 20 ஆகஸ்ட் 2009 19:00
- எழுத்தாளர்: இணைய மேலாளர்
- படிப்புகள்: 7656
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று தமிழைப் போற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர்.
சுப்பிரமணியன் (சின்னசாமி சுப்பிரமணிய ஐயர்) என்பது பாரதியின் இயற்பெயர். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதியின் மனைவி செல்லாம்மாள்.
இவரின் படைப்புகள் சில
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம்