கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கனவு

 • அன்பாலே அழகாகும் வீடு

  படம்: பசங்க

  அன்பாலே அழகாகும் வீடு


  அன்பாலே அழகாகும் வீடு....
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு...
  சொந்தங்கள் கை சேரும்போது....
  வேறொன்றும் அதற்கில்லை ஈடு...

  அன்பாலே அழகாகும் வீடு
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு
  சொந்தங்கள் கை சேரும்போது
  வேறொன்றும் அதற்கில்லை ஈடு

  வாடகை வீடே என்று
  வாடினால் ஏது இன்பம்
  பூமியே நமக்கானது.... ஓ.....
  சோகமே வாழ்க்கை என்று
  சோர்வதால் ஏது லாபம்
  யாவுமே இயல்பானது....
  மாறாமல் வாழ்வுமில்லை
  தேடாமல் ஏதுமில்லை
  நம்பிக்கை விதையாகுமே
  கலைகின்ற மேகம் போலே
  காயங்கள் ஆறிப்போக
  மலரட்டும் எதிர்காலமே....

  அன்பாலே அழகாகும் வீடு....
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு...
  சொந்தங்கள் கை சேரும்போது....
  வேறொன்றும் அதற்கில்லை ஈடு...

  பாசமே கோவில் என்று
  வீட்டிலே தீபம் வைத்தால்
  கார்த்திகை தினந்தோறுமே....
  ஆ.. நேசமே மாலை என்று
  நெஞ்சிலே சூடிக்கொண்டால்
  வாசனை துணையாகுமே ஆ...
  கூடினால் கோடி நன்மை
  சேருமே கையில் வந்து
  வாழ்ந்திடு பிரியாமலே
  ஏணியே தேவையில்லை
  ஏறலாம் மேலே மேலே
  தோல்விகள் வெறும் காணலே.....

  அன்பாலே அழகாகும் வீடு
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு
  சொந்தங்கள் கை சேரும்போது
  வேறொன்றும் அதற்கில்லை ஈடு

  அன்பாலே அழகாகும் வீடு
  ஆனந்தம் அதற்குள்ளே தேடு
  சொந்தங்கள் கை சேரும்போது
  வேறொன்றும் அதற்கில்லை ஈடு

  - யுகபாரதி

 • உள்ளம் என்பது ஆமை

  திரைப்படம்: பார்த்தால் பசி தீரும்


  உள்ளம் என்பது ஆமை - அதில்
  உண்மை என்பது ஊமை
  சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
  தூங்கிக் கிடக்குது நீதி (உள்ளம் என்பது)

  தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
  சிலையென்றால் அது சிலைதான்
  தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
  சிலையென்றால் அது சிலைதான்
  உண்டென்றால் அது உண்டு
  உண்டென்றால் அது உண்டு
  இல்லையென்றால் அது இல்லை
  இல்லையென்றால் அது இல்லை (உள்ளம் என்பது)

  தண்ணீ தணல் போல் எரியும் - சென்
  தணலும் நீராய்க் குளிரும்
  தண்ணீ தணல் போல் எரியும் - சென்
  தணலும் நீராய்க் குளிரும்
  நண்பரும் பகை போல் தெரியும்
  நண்பரும் பகை போல் தெரியும் - அது
  நாட்பட நாட்படப் புரியும்
  நாட்பட நாட்படப் புரியும் (உள்ளம் என்பது)

  -  கண்ணதாசன்

 • ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!

  படம் : முதலாளி


   

  ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
  என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
  அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
  ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

  தென்னை மரச் சோலையிலே
  சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
  நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
  சேர்ந்து பேசி போவோம் கண்ணே
  அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
  ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

  மாமரத் தோப்பினிலே
  மச்சான் வரும் வேளையிலே (2)
  கோபங் கொண்ட மானைப் போலே
  ஓடலாமோ பெண்மயிலே!
  அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
  ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

  - கவி கா.மு.ஷெரீப்

 • ஒரு வெட்கம் வருதே வருதே

  படம்: பசங்க

  ஒரு வெட்கம் வருதே வருதே
  சிறு அச்சம் தருதே தருதே
  மனம் இன்று அலைப்பாயுதே
  இது என்ன முதலா முடிவா
  இனி எந்தன் உயிரும் உனதா
  புது இன்பம் தாலாட்டுதே

  போகச்சொல்லி கால்கள் தள்ள
  நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
  இது முதல் அனுபவமே
  இனி இது தொடர்ந்திடுமே
  இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

  மழை இன்று வருமா வருமா
  குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
  கனவென்னக் களவாடுதே
  இது என்ன முதலா முடிவா
  இனி எந்தன் நேரம் உனதா
  புது இன்பம் தாலாட்டுதே
  கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
  கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
  பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
  வர வர வரக்கரைத்தாண்டிடுமே

  மேலும் சில காலம்
  உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
  உன் மடியிலே என் தலையணை
  இருந்தால் உறங்குவேன்
  ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
  கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
  ஒரு வரி சொல்ல
  ஒரு வரி நான் சொல்ல
  எழுந்திடும் காதல் காவியம்
  அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
  (மழை இன்று..)

  ஆ.. காற்றில் கலந்து நீ
  என் முகத்தினை நீயும் மோதினாய்
  பூ மரங்களில் நீ இருப்பதால்
  என் மேல் உதிர்கிறாய்
  தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
  நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
  வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
  நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
  (ஒரு வெட்கம்..)

  - தாமரை

 • உனக்கென இருப்பேன். உயிரையும் கொடுப்பேன்.

  படம்: காதல்

  உனக்கென இருப்பேன்.
  உயிரையும் கொடுப்பேன்.
  உன்னை நான் பிரிந்தால்,
  உனக்கு முன் இறப்பேன்.
  கண்மணியே, கண்மணியே!
  அழுவதேன்?... கண்மணியே!
  வழித்துணை நான் இருக்க...

  கண்ணீர் துளிகளைக், கண்கள் தாங்கும் - கண்மணி
  காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
  கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் - என்றுதான்
  வண்ணத்துப் பூச்சிகள் பார்த்திடுமா?
  மின்சாரக் கம்பிகள் மீதும்,
  மைனாக்கள் கூடு கட்டும்,
  நம் காதல் தடைகளைத் தாண்டும்.
  வளையாமல் நதிகள் இல்லை,
  வலிக்காமல் வாழ்க்கை இல்லை,
  வரும் காலம் காயம் ஆற்றும்.
  நிலவொளியை மட்டும் நம்பி,
  இலையெல்லாம் வாழ்வதில்லை,
  மின்மினியும் ஒளி கொடுக்கும்!

  தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் - தோழியே!
  இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
  தோளிலே நீயுமே சாயும்போது - எதிர்வரும்
  துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
  வெந்நீரில் நீர் குளிக்க,
  விறகாகித் தீக் குளிப்பேன்,
  உதிரத்தில் உன்னைக் கலப்பேன்.
  விழி மூடும் போதும் உன்னை,
  பிரியாமல் நான் இருப்பேன்,
  கனவுக்குள் காவல் இருப்பேன்.
  நான் என்றால் நானேயில்லை,
  நீதானே நானாய் ஆனேன்.
  நீ அழுதால் நான் துடிப்பேன்.

  - நா.முத்துக்குமார்

 • முன் பனியா? முதல் மழையா?

  படம் : நந்தா


  முன் பனியா? முதல் மழையா?
  என் மனதில் ஏதோ விழுகிறதே..!
  விழுகிறதே.... உயிர் நனைகிறதே....!
  புரியாத உறவில் நின்றேன்!
  அறியாத சுகங்கள் கண்டேன்!
  மாற்றம் தந்தவள் நீதானே!

  மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
  மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
  கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
  கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
  மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

  என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
  எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
  உன் விழியினில்... உன் விழியினில் அதனை,
  இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
  இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
  அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
  வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே.....!

  சலங்கை குலுங்க ஓடும் அலையே!
  சங்கதி என்ன சொல்லடி வெளியே!
  கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
  நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
  ஏலோ ஏலோ... ஏலே ஏலோ....!

  என் பாதைகள்.... என் பாதைகள்
  உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
  என் இரவுகள், என் இரவுகள்
  உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
  இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
  எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
  மூழ்கினேன்.... நான் உன் கண்ணிலே...!

  - பழனிபாரதி

 • கனேடியப் பருவமங்கை  மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க
  வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில்
  பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில்
  மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

  வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே
  அம்மங்கை சேலையின் பசும்பச்சை நிறந்தன்னை
  நெடுஞ்சாலைச் சாரதிகள் பார்வையினால் ரசித்திடவே
  மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

  கோடையின் கொடையினால் கொண்டையில் பூச்சூடி
  அங்கமெல்லாம் மலர்சூடிப் பூரித்து நின்றதனை
  நெடுஞ்சாலை இளைஞர்கள் கண்குளிர ரசித்திடவெ
  மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

  ஐப்பசி மாதம்தனில் குளிர்தென்றல் வீசிடவே
  பலவர்ணச் சேலைகளை மங்கையவள் மாற்றிவிட
  பல்சாதி வழிப்போக்கர் விழிபிதுங்கி வியந்திட
  மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

  இலையுதிர் காலந்தனில் சருகுகள் புடைசூழ
  சேலையின்றி நிர்வாணமாய்த் துனிந்தே நின்றுவிட
  நெடுஞ்சாலைப் பயணிகள் கவனத்தைக் கவராது
  மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

  - பொன் (நன்றி : திண்ணை)

 • உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

   

  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
  பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
  மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
  நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
  நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

  மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்
  தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
  முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
  என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
  உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
  நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
  பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

  நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு
  நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
  நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
  நீ ஈரமான பாறை உள் உள்ளம் சொல்லுது
  உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
  நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
  பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
  மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
  நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
  நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

   

  -வைரமுத்து

 • ஏழையின் கனவு

  கோடி நட்சத்திரம் கண்களில் மலர்ந்தது
  காட்சியை இரசிக்கத்தான் மனமில்லை
  சுவரில் மோதியவலி பின்தலையில்.

  கண்களில் தெரிந்தது நீரின் காட்சி
  தாகம் தணிக்குமா கானல் நீர்?
  ஏழையின் கனவு.

  வாழ்வின் சந்தோசமான தருணங்கள்;
  ஏழை நினைப்பதும் நடக்கின்றது
  கலைத்துவிடாதீர் தூக்கத்தை!.

  அருகில் தெரிந்தது தொடுவானம்!...
  தொட்டுவிட தொடர்ந்தே நடந்தேன்...
  தொடர்கதையானது ஏழ்மையைப்போல.

  வானம் பொய்த்துவிட்டது...
  யாருக்கு இங்கே புரியும்?...
  உதிரும் இலையின் வலி.

   

  -கலைமார்தாண்டம்

 • என் வீட்டு தலையணை

  என் கனவுகளை,
  கவிதைகள் தின்று,
  எச்சத்தை
  என் வீட்டு தலையணை தின்று
  பெருத்து கிடக்கிறது

  அதுவும்
  காதல் கற்று கொண்டது போல
  துணை வேண்டி
  ஆர்ப்பாட்டம் செய்கிறது
  இரவில் அதன் தொல்லை
  தாங்கமுடியவில்லை

  நீயாவது ஜோடியோடு இரு
  என்று துணைக்கு ஒரு
  தலையணை வாங்கி போட்டேன்
  இப்போதெல்லாம் அவர்கள்
  செய்யும் குறும்புகள்
  தாங்கமுடியவில்லை

  வழக்கமான காதலர்கள் போல்
  தொட்டுக்கொள்ள ஆரம்பித்து
  இப்போது கட்டிக்கொள்ளும்
  வரை வந்து நிற்கிறது

  தலை அணைப்பதற்கு பதிலாய்
  தலைவனையே அணைத்து கிடக்கிறது
  தலைவி தலையணை

  உயரம் வேண்டி அடுக்கிவைத்து
  உறங்கும்போது
  முத்த சத்தம்வேறு
  இரண்டாம் சாமத்தில்

  அவள் நினைவில் கட்டிக்கொண்டு
  உறங்கும்போது
  அவைகள்
  உறங்குவதும் இல்லை
  உறங்க விடுவதும் இல்லை
  அரை தூக்கம் குறை தூக்கமாய்
  இருந்த என்னை
  அறவே தூக்கம்
  இல்லாமல் செய்து விட்டன

  உறை மாற்றும் வேளையில்
  வெட்கப்பட்டு போர்வைக்குள்
  ஒளிந்து கொள்கின்றன...

  இப்போதெல்லாம்...
  ஏன்டா எங்களை
  இருவேறு உறைகள் இட்டு பிரித்து
  வைக்கிறாய் என்று திட்டி
  தீர்த்துவிடுகின்றன

  என் கண்ணீர் தொட்டு
  கவிதைகளும் எழுத கற்று
  கொண்டு விட்டன.

  ஒரேஒரு குறை,
  அவைகள் இன்னும்
  குட்டிபோட
  கற்றுக்கொள்ளவில்லை!

  - சீமான்

 • ஒளிந்திருந்த கடவுள்

  தங்களின் பாரத்தை கடவுளிடன்
  இறக்கி வைத்து விட்டு பக்தர்களும்

  கோவிலை பூட்டி விட்டு பூசாரியும்
  கிளம்பிய பின்னர் யாருமில்லை
  என்று உறுதிப்படுத்தி கொண்ட

  மரத்தின் பின்னால்

  ஒளிந்திருந்த கடவுள்
  பெருமூச்சுடன்

  கோவிலுக்குள் புகுந்து கொண்டார்

  - கார்த்திக்

 • சொட்ட சொட்ட நனையுது

  அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

  நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
  இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா

  சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
  இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
  அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
  நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
  இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
  இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

  சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
  இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
  அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

  உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
  இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
  உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
  இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
  வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
  நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
  இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
  இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா

  சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
  இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
  அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

  நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
  இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
  இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

  இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
  இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

  - வைரமுத்து

 • கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

  படம் : சுப்ரமணியபுரம்


  கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
  என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
  சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
  என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

  பேச எண்ணி சில நாள்
  அருகில் வருவேன்
  பின்பு பார்வை போதும் என நான்
  நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

  கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
  ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
  ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
  இதை இருளிலும் படித்திட முடிகிறதே

  இரவும் அல்லாத பகலும் அல்லாத
  பொழுதுகள் உன்னோடு கழியுமா
  தொடவும் கூடாத படவும் கூடாத
  இடைவெளி அப்போது குறையுமா

  மடியினில் சாய்ந்திட துடிக்குதே
  மறுபுறம் நாணமும் தடுக்குதே
  இது வரை யாரிடமும் சொல்லாத கதை

  கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
  மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
  உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
  கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

  உனையன்றி வேறொரு நினைவில்லை
  இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
  தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

  - தாமரை

 • கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

  படம்: 7ஜி ரெயின்போ காலணி


  கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
  காத்திருந்தால் பெண் கனிவதில்லை
  ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
  கண்ணாடி இதயம் இல்லை
  கடல் கை மூடி மறைவதில்லை
  கண்ணாடி இதயம் இல்லை
  கடல் கை மூடி மறைவதில்லை

  காற்றில் இலைகள் பறந்த பிறகும்
  கிளையின் தழும்புகள் அழிவதில்லை
  காயம் நூறு கண்ட பிறகும்
  உன்னை உள் மனம் மறப்பதில்லை
  ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
  வருகிற வலி அவள் அறிவதில்லை
  கனவினிலும் தினம் நினைவினிலும்
  கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

  காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை
  கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
  தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
  மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
  விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
  அலை கடலை கடந்த பின்னே நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

  உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
  மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
  ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
  இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
  பனி துளி வந்து மோதியதால்
  இந்த முள்ளும் இங்கே துண்டானது
  பூமியில் உள்ள பொய்களெல்லாம்
  ஆட புடவை கட்டி பெண்ணானது
  புயல் அடித்தால் மழை இருக்கும்
  மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
  சிரிப்பு வரும் அழுகை வரும்
  காதலில் இரண்டுமே கலந்து வரும்
  ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
  வருகிற வலி அவள் அறிவதில்லை
  கனவினிலும் தினம் நினைவினிலும்
  கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
  கண் பேசும் வார்த்தை.......

  - நா.முத்துக்குமார்

 • ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி

  படம் : வேல்


  ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
  ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
  புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
  தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
  தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
  காதல் பூக்குதே ஹே ஹே ஹே

  ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
  மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
  நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
  உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
  பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
  கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
  தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
  காதல் பூக்குதே

  ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
  காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
  மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
  அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
  பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
  கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
  அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
  காதல் பூக்குதே
  - நா. முத்துக்குமார்
 • நினைவில் சில கனவுகள்

  எட்டும் தொலைவில் வானம்,
  விண்மீனும் கண் சிமிட்டும்,
  வானவில் வந்து குடை பிடிக்கும்,
  நீ என் அருகில் இருந்தால்!
  உன் முகத்தில் விழும் கேசம்,
  அழகின் கதைகள் பேசும்,
  தோளில் சாய்ந்த உன் வாசம்,
  என் சட்டையிலும் கொஞ்சம் மிஞ்சும்
  நான்கு விழிகளில் ஒரு கனவு ,
  என்று ஆகும் நனவு ,
  என்றும் எதிலும் எங்கும்
  உன் நினைவு!
  - கனவுசிற்பி
 • களவு போன கன்னிக்கவிதை...


  எனக்கே எனக்காய் எழுதிய கவிதை;
  என் உயிர் தொட்ட அழகு கவிதை;
  என்னை உயிர் தொட அனுமதித்த கவிதை;
  ஏழு ஜென்மமும் இணைந்தே இருப்பேன் என்று,
  எழுதி தந்த கவிதை.

  காலம் காலமாய் என்
  கனவுகள் சுமந்த கவிதை;
  கனவில் புகுந்து,
  காதல் சொன்ன கவிதை;
  காதலின் கற்ப்பை கடைசிவரை,
  காப்பாற்றிய கவிதை;
  காதல் கலவர படும் பொது,
  கரம் பற்றி காத்த கவிதை;
  காற்றில் கலந்து,
  சுவாச பையில் சுகந்தமாய்
  சுற்றி திரிந்த கவிதை.

  காணவில்லை...
  காவு கொடுத்து விட்டோமோ என்ற கவலை...
  கனவில் எழுதினால்
  களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
  அணுவிலும் எழுதி வைத்தேன்...
  காமன் வந்து கடத்தி இருப்பானோ??இல்லை,
  காதல் கதறினால் கவலை கொள்வானே அவன்.
  கடவுள் கடத்தி இருப்பானோ??இல்லை,
  கவிதை கண்டு கொடுத்தவனே அவன்தானே.
  கலவர படுகிறதேன் காதல்...

  கற்ப்பனை குதிரை ஏறி,
  கடிவாளம் பிடித்து,
  கனவுகளை கூட்டிக்கொண்டு,
  காற்றில் விரைந்து போகிறேன்;
  காணவில்லை.

  கால்தடம் இல்லா
  கடல் தீவெல்லாம்
  கலைத்து தேடுகிறேன்
  காணவில்லை...

  பூமியில் புதையலாய்
  புதைந்திருப்பாய் என்று;
  பூமி பிழந்தும்- பிரபஞ்சம் அலைந்தும்
  பார்கிறேன் காணவில்லை...

  காதல் தேவனின்
  காலை பிடித்து
  கதறி கேட்டேன்;
  கடைசியாய் கையில் வைத்திருந்த
  காட்சி பேழையில் காட்டினான் காட்சிகள்...

  கல்யாணம் என்ற
  கள்வன் களவாடி
  கணிசமான தொகைக்கு
  கை மாற்றி விடுகிறான்.

  கண்டதும் கலவரமாகி;
  கள்வனை தேடி காணவில்லை;
  கவிதை வங்கியவனை கண்டேன்-அவன்
  கணவன் என்று சொந்தம் சொல்லி போனான்;
  களவு போன கவிதை அவளை,
  கண்டும் கரம் பற்ற முடியவில்லை.

  காலம் பல கடந்தன...
  காற்று வாங்குவது போல்
  கவிதை அவளை கண்டுவர
  கடந்து போனேன்...

  நீ மலட்டு கவிதை -என
  சில கிழட்டு கவிதைகள் கேலிபேச
  கன்னி கவிதை நீ;
  கண்ணிர் உடுத்தி
  கரைந்திருந்தாய்...

  - சீமான் கனி
 • கனா கண்டதில்லை

  நீயிருக்கும்
  எத்திசையும்
  எனக்கு
  நீ
  கிழக்காகயிருக்க
  கனா கண்டதில்லை.

  என்
  விழிப்பின்
  முதல்
  முகம்
  உன்
  முகமாகயிருக்க
  கனா கண்டதில்லை.

  எதற்குமே
  அடிப்பணியா
  என் மனதைகூட
  உன்
  சிரிப்பு
  அடிமையாக்கியிருக்க
  கனா கண்டதில்லை.

  என்
  படுக்கையில்
  கை தொடும்
  தூரம்வரை
  நீயிருக்க
  கனா கண்டதில்லை.

  உன் சற்று
  நேர
  பிரிவுகூட
  சூரியனை
  இழந்த
  பூமியாக
  என் வாழ்க்கையிருக்க
  கனா கண்டதில்லை.

  ஆனால்,
  உன்
  வாழ்க்கையை
  வேரொருவனுக்கு
  சொந்தமயிருக்க
  ஒருபோதும்
  கனா கண்டதில்லை.

  - ரியாஸ் அகமத்
 • விழியில் விழுந்து இதயம் நுழைந்து

  பாடல்: அலைகள் ஓய்வதில்லை
  விழியில் விழுந்து இதயம் நுழைந்து
  உயிரில் கலந்த உறவே
  இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
  அந்திப் பொழுதினில் வந்துவிடு
  அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
  உயிரைத் திருப்பித் தந்து விடு

  உன் வெள்ளிக் கொலுசொலியை
  வீதியில் கேட்டால்
  அத்தனை ஜன்னலும் திறக்கும்
  நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு
  அத்தனை திசையும் உதிக்கும்
  நீ மல்லிகைப் பூவை சூடிக்  கொண்டால்
  ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
  நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
  பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்


  கல்வி கற்க காலை செல்ல
  அண்ணன் ஆணையிட்டான்
  காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்
  தரையில் தூக்கிப் போட்டான்

  விழியில் விழுந்து இதயம் நுழைந்து
  உயிரில் கலந்த உறவே
  இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
  அந்திப் பொழுதின் போது
  அலையின் கரையில் காத்திருப்பேன்
  அழுத விழிகளோடு
  எனக்கு மட்டும் சொந்தம்
  உனது இதழ் கொடுக்கும் முத்தம்
  எனக்கு மட்டும் கேட்கும்
  எனது உயிர் கொதிக்கும் சத்தம்

  - வைரமுத்து
 • நிலவுக்கு வந்த கடிதங்கள்

  நிலவுக்கு வந்த
  கோடி காதல் கடிதங்கள்
  நட்சத்திரம் !

  - குகன்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி